மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை(15) மாலை கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஆறு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்..
மன்னார் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும் அடம்பன் பொலிஸார் இணைந்து குருவில் வான் பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஆறு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட ஒரு தொகுதி பொருட்களை இராணுவம் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தப்பியோடிய சந்தேக நபர்கள் 6 பேரை பொலிசார் தேடி வரும் நிலையில், மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM