(எம்.மனோசித்ரா)
இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் , இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் விலையை அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
விலை அதிகரிப்பிற்கான அனுமதி வழங்கப்படாவிட்டால், வரி சலுகையையேனும் வழங்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரியுள்ளது. நிதி அமைச்சிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் தற்போதைய விலையினை தொடர்ந்தும் பேணுவதால், ஏற்படும் பாரிய நட்டத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே சுமப்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் நிதியின்மையினால் எதிர்வரும் காலங்களில் டொலரை பெற்றுக்கொள்வதும் சவாலானதாக மாறியுள்ளதாக எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
டொலர் இன்மையினால் எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கருத்திற்கொண்டு உடனடியாக எரிபொருளுக்காக வரிச்சலுகையை வழங்க வேண்டும் அல்லது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனம் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM