12 ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு கோடியில் பணப்பரிசு

Published By: Digital Desk 4

15 Feb, 2022 | 05:41 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்தில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 12 ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 26 கோடியே 73 இலட்சத்து 10,692 ரூபா பணப்பரிசாக கிடைக்கவுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் சம்பியன் அணிக்கு வழங்கப்பட்ட பணப்பரிசைவிட இது இரட்டிப்பு மடங்காகும்.

இந்த வருடத்துக்கான மொத்த பணப்பரிசு 75 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

போட்டியில் பங்குபற்றும் சகல அணிகளுக்கும் வழங்கப்படும் மொத்தப் பணப்பரிசு 70 கோடி ரூபாவுக்கு சற்று அதிகமாகும்.

முதல் சுற்றுடன் வெளியேறும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடியே 41 இலட்சம் ரூபாவுக்கு மேல் கிடைக்கும்.

அரை இறுதிகளில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா 6 கோடியே 7 இலட்சத்து 53,430 ரூபா கிடைக்கும்.

இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 12 கோடியே 15 இலட்சத்து 4,860 ரூபா பணப்பரிசு காத்திருக்கின்றது.

இவற்றைவிட 28 போட்டிகளைக் கொண்ட லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் 50 இலட்சத்து 62,702 ரூபா பணம் பரிசு வழங்கப்படும்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 8 நாடுகள் பங்குபற்றும் மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

டவ்ரங்கா, பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வரவேற்பு நாடான நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது.

முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று ஒரு தடவை எதிர்த்தாடும். இதன்படி முதல் சுற்றில் 28 லீக் போட்டிகள் நடைபெறும்.

மார்ச் 27ஆம் திகதியுடன் நிறைவுபெறும் முதல் சுற்றில் அணிகள் நிலையில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

முதலாவது அரை இறுதிப் போட்டி மார்ச் 30ஆம் திகதியும் 2ஆவது அரை இறுதிப் போட்டி மார்ச் 31ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஏப்ரல் 3ஆம் திகதியும் நடைபெறும். இப் போட்டிகளுக்கு மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 6 தடவைகளும் இங்கிலாந்து 4 தடவைகளும் நியூஸிலாந்து ஒரு தடவையும் சம்பியனாகியுள்ளன.

இந்த 3 நாடுகளைவிட இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளே இறுதி ஆட்டங்களில் விளையாடியுள்ள மற்றைய 2 நாடுகளாகும். பங்களாதேஷ் இந்த வருடம் முதல் தடவையாக மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49