பாகிஸ்தானில் மற்றுமொருவர் கட்டி வைத்து கல்லால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குர்ஆன் நூலின் பக்கங்களை கிழித்து, தீ வைத்து எரித்து விட்டதாகவும் அவர் மத நிந்தனை செய்துள்ளதாகவும் கூறியே கொலைச்செய்யப்பட்டுள்ளார்.
அடிப்படைவாத குழுவொன்றே இந்த கொலைக்கு பின்னணியில் உள்ளதாக அந்நாட்டு பொலிசாரை சுட்டிக்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜங்கல் டேரா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
41 வயதான முஸ்டாக் அகமது என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது முஸ்டாக் அகமது நான் குரானை எரிக்கவே இல்லை என்று கதறி அழுதுள்ளார், எனினும் அவர் சம்பவ இடத்திலேயே மிக கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
குறித்த அடிப்படைவாத குழு படுகொலை செய்ததோடு, அவரின் சடலத்தை மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதுடன் இவ்வகையான வன்முறைக்கு எனது அரசு இடமளிக்காது என பாகிஸ்தான் பிரதமர் கண்டித்துள்ளார்.
இலங்கை பிரஜையொருவரை மத நிந்தனை செய்ததாக தாக்கி கொலை செய்த பின்னர் அதே போன்றதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது மத அடிப்படைவாதத்தின் பேரில் அப்பாவி உயிர்கள் பாகிஸ்தானில் கொலை செய்யப்படுகின்றமை கவலையளிக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM