இராணுவத்தினருக்கு வீட்டு நிர்மாணத்திற்காக நிதி உதவி

15 Feb, 2022 | 05:03 PM
image

இராணுவத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள்,  காயமடைந்த,ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து  கொடுப்பதற்கான வீடமைப்பு திட்டத்தின் 7 வது சட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் நிகழ்வு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 48 வீடுகளின் நிர்மாண பணிகளுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டதுடன், 11 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும் 37 வீடுகள் பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் நிர்மாண பணிகளை முழுமைப்படுத்துவதற்குமாக மேற்படி நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தினூடாக முழுமையாக புதிய வீடொன்றை நிர்மாணித்துகொள்ள 1.5 மில்லியன் மற்றும் பகுதியளவில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 750,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது போரில் வீர மரணம் எய்திய 9 வீரர்களின் குடும்பத்தினரும், காயமடைந்த 12 வீரர்கள், 03 ஓய்வுபெற்ற வீரர்கள்  மற்றும் சேவையிலிருக்கும் 24 இராணுவ வீரர்களும்  குறித்த நிதியுதவியினை  பெற்றுக்கொள்ளும் முகமாக கலந்துகொண்டிருந்தனர்.

இது வரையில் இத்திட்டத்தின் கீழ் 244 முழுமையான வீடுகளை நிறுவதற்கும் 24 பகுதியளவான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15