காணாமல்போனவர்களின் உயிரைக் கேட்டால் எவ்வாறு கொடுக்க முடியும் - அலி சப்ரி செவ்வி

15 Feb, 2022 | 05:23 PM
image

(நேர்காணல்:- ஆர்.யசி)

பாதுகாப்பு படைகளில் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர் தவறுகள் இடம்பெற்றிருந்தால் உள்ளக பொறிமுறையிலான விசாரணைக்கு தயார் ஜெனிவாவில் அறிக்கைகளை வெளியிடுவதால் உள்நாட்டில் ஒன்றுமே நடக்கப்போவதில்லை சர்வதேச தரப்பு எமக்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும்.

யுத்த காலகட்டத்தில் தமிழர் தரப்பில் பலர் காணாமல் போயுள்ளனர் என்பதை நாம் மறுக்கவில்லை, அவர்களின் உயிரை மீண்டும் தாருங்கள் என்று கேட்டால் எம்மால் கொடுக்க முடியாது. 

ஆகவே தான் இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கம் அதிக முக்கியத்துவத்தை கொடுத்து தீர்வுகளை வழங்க முயற்சிக்கின்றோம். 

காணாமல் போனோரின் குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துகொடுக்க அரசாங்கமாக தயாராக உள்ளோம் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். 

அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- ' நீதிக்கான அணுகல்' நடமாடும் நீதிச்சேவை வெற்றியளித்துள்ளதா?

பதில்:-  ஆம், நாட்டில் சகல பகுதிகளிலும் மக்கள் தமக்கான நீதிச்சேவையை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. 

குறிப்பாக காணி வழக்குகள், சொத்து வழக்குகள், நிருவாக பிரச்சினைகள் என்று பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால் ஏனைய பகுதிகளை விடவும் வட மாகாணத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டிய தேவையொன்று உள்ளதென அவதானித்தோம்.

குறிப்பாக வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதையும் நாம் அவதானித்தோம்.

இவ்வளவு காலமாக கொழும்பில் இருந்து இவற்றை கையாண்ட எமது அதிகாரிகளை வடக்கிற்கு அழைத்துச்சென்ற பின்னரே தமிழ் மக்களின் வேதனை அவர்களுக்கும் தெரியவந்துள்ளது.

அவர்களும் எமது மக்களே, எனினும் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பாரதூரமானவை என்பதை எமது அதிகாரிகள் விளங்கிக்கொண்டுள்ளனர்.

படப்பிடிப்பு:- எஸ்.எம்.சுரேந்திரன்

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

 

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-02-13#page-21

 

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'உள்நாட்டு அரசியல் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாத்தாலும் பொறுப்புக்கூறலை...

2025-03-26 13:31:44
news-image

அபிவிருத்திக்கான தடைகளை அகற்றுதல்

2025-03-26 14:11:02
news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 14:14:36
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53