ஐ.சி.சி.யின் அதிசிறந்த வீரர்களுக்கான விருதுப் பட்டியல்

15 Feb, 2022 | 03:20 PM
image

(என்.வீ.ஏ.)

இந்த வருடத்தின் முதலாவது மாதத்துக்கான (ஜனவரி) அதிசிறந்த ஐசிசி வீரர், வீராங்கனை விருதுகளை முறையே தென் ஆபிரிக்காவின் கீகன் பீட்டர்சன், இங்கிலாந்தின் ஹீதர் நைட் ஆகியோர் வென்றெடுத்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரருக்கான விருதுக்கு 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்க வீரர் டிவோல்ட் ப்ரெவிஸ், பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர் ஈபாடொத் ஹொசெய்ன் ஆகியோருடன் கீகன் பீட்டர்சனும் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆபிரிக்காவின் வெற்றியில் பிரதான பங்காற்றியமைக்காக பீட்டர்சனுக்கு மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர் விருது வழங்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3 அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 276 ஓட்டங்களைப் பெற்று தொடரில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரரானதுடன் தொடர்நாயகன் விருதையும் வென்றிருந்தார். 

இவர் ஜனவரி மாதம் நடைபெற்ற 2 டெஸ்ட்களில் 3 அரைச் சதங்களுடன் 244 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருந்தார்.

மகளிருக்கான ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து, மேற்கிந்தியத் தீவுகள் நட்சத்திரம் டியேந்த்ரா டொட்டின் ஆகியோரைவிட அதிக வாக்குகளைப் பெற்ற ஹீதர் நைட் மாத்தத்தின் அதிசிறந்ந ஐசிசி வீராங்கனை விருதுக்கு சொந்தக்காரரானார்.

அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பலவடிவ ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கான ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹீதர் நைட் அபாரமாகத் துடுப்பெடுத்தாடியதன் மூலம் இந்த விருதுக்கு உரித்தானார்.

முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலியா நிறுத்திக்கொண்ட பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும் 3ஆம் இலக்க வீராங்கனையாக களம் நுழைந்திருந்த ஹீதர் நைட், 9ஆவது விக்கெட்டில் சொபி எக்லெஸ்டோனுடன் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை கௌரவமான நிலைக்கு இட்டுச் சென்றார். 

இங்கிலாந்து பெற்ற 297 ஒட்டங்கள் என்ற மொத்த எண்ணிக்கையில் ஹீதர் நைட் 168 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இங்கிலாந்தின் முதல் 5 துடுப்பாட்டக்காரர்களும் திறமையாக துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவுக்கு பெரும் சோதனையைக் கொடுத்தனர். நட் சிவர் 58 ஓட்டங்களைப் பெற ஹீதர் நைட் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 48 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தபோது இங்கிலாந்து அதன் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அப் போட்டியில் ஹீதர் நைட் 216 ஓட்டங்களை மொத்தமாக குவித்ததன் மூலம் ஐசிசி மாத விருதை வென்றெடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டயலொக் ஜனாதிபதி கிண்ண நொக் அவுட்...

2026-03-10 15:09:09
news-image

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக...

2026-03-09 19:42:23
news-image

நியூஸிலாந்தை 96 ஓட்டங்களால்  வீழ்த்தி மூன்று...

2026-03-08 23:35:05
news-image

சம்பியன் ஆவதற்கான ஜாவா லேன், செரெண்டிப்...

2026-03-08 21:38:46
news-image

இந்தியா 255 ஓட்டங்களைக் குவித்தது; சஞ்சு...

2026-03-08 21:20:47
news-image

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து களத்தடுப்பை...

2026-03-08 18:54:43
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் வரலாற்று வெற்றிக்கு...

2026-03-08 20:25:49
news-image

புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி...

2026-03-08 10:58:26
news-image

119ஆவது வடக்கின் சமர்: திசோன் சகலதுறைகளிலும்...

2026-03-08 15:52:35
news-image

சம்பியன்ஸ் லீக்: சம்பியன் பட்டத்திற்கு கடும்...

2026-03-07 15:09:28
news-image

19ஆவது வடக்கின் சமர்:  அபிஜோய்ஷாந்த் குவித்த...

2026-03-06 18:54:08
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டியில்...

2026-03-05 23:47:04