(என்.வீ.ஏ.)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத்தில் சப்ரகமுவ மாகாணமும் வட மாகாணமும் ஏற்கனவே அரை இறுதிச் சுற்றுக்கு தெரிவான நிலையில் மற்றைய இரண்டு அணிகளைத் தீர்மானிக்கும் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை (15) பிற்பகல் நடைபெறவுள்ளன.
அணிகள் நிலையில் தலா 7 புள்ளிகளுடன் முறையே 3ஆம், 4ஆம், 5ஆம் இடங்களிலுள்ள மேல் மாகாணம், கிழக்கு மாகாணம், தென் மாகாணம் ஆகிய அணிகளுக்கு இடையில் அரை இறுதிக்கான எஞ்சிய 2 இடங்களுக்கு போட்டி நிலவுகின்றது.
இந்த 3 அணிகளில் 2 அணிகளுக்கு அதிகப்பட்சமாக 13 புள்ளிகளைப் பெறக்கூடியதாக இருக்கின்றது.
இந் நிலையில் மாத்தறையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள 6ஆம் கட்டப் போட்டியில் மேல் மாகாண அணியை தோல்வி அடையாமல் இருக்கும் கிழக்கு மாகாண அணி எதிர்த்தாடவுள்ளது.
அதே நேரம் காலியில் நடைபெறவுள்ள போட்டியில் தென் மாகாணத்தை ஊவா மாகாணம் சந்திக்கவுள்ளது.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த 2 போட்டிகளும் 3 அணிகளுக்கு தீர்மானம் மிக்க போட்டிகளாக அமைவதால் கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM