இந்தியாவில் 87 வயதான வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இந்தியாவில் டெல்லியில் திலக் நகரில் 87 வயது வயோதிபப் பெண் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் மகள் வெளியே சென்ற போது மர்மநபர் ஒருவர் வீட்டுற்குள் புகுந்து தனியாக இருந்த குறித்த வயோதிப பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அத்தோடு, வீட்டில் இருந்த கைத் தொலைப்பேசியையும் திருடி சென்றுள்ளார்.
அவரது மகள் திரும்பி வந்து பார்த்த போது ஆடை கிழிந்த நிலையில் இருந்த வயோதிப பெண் இருந்துள்ளார்.
சம்பவம் தெடர்பில் அவரது மகள் , கைத்தொலைப்பேசி திருடப்பட்டதாக மாத்திரம் முதலில் புகார் கொடுத்துள்ளதை தொடர்ந்து திருட்டு வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தனது தாயும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என திங்கட்கிழமை பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பொலிஸார் பாலியல் துஷ்பிரயோகம் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உயிர் பிழைத்த வயோதிப பெண்ணுக்கு ஆலோசனை மற்றும் தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM