சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி:20 போட்டியில், உரிய நேரத்தில் ஓவர்களை வீசத் தவறியதற்காக அனைத்து இலங்கை வீரர்களுக்கும் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டி நடுவராக இருந்த டேவிட் பூன், தசுன் ஷனக மற்றும் அவரது குழுவினருக்கு ஒதுக்கப்பட்ட 20 ஓவர்களுக்கான நேரத்தை விட மேலதிகமான நேரத்தை எடுத்துக் கொண்ட காரணத்திற்காக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் நிர்வாக வீரர்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்களுக்கான நடத்தை விதியின் பிரிவு 2.22ன் படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசத் தவறிய ஒவ்வொரு ஓவருக்கும் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 20% வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டியின் போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பத்தும் நிசாங்கவை போட்டி நடுவர் எச்சரித்துள்ளார். 

அவரது தனிப்பட்ட ஒழுக்காற்று கணக்கிற்கு பெனால்டி மதிப்பெண் வழங்கவும் போட்டி நடுவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அணியின் தலைவர் தசுன் ஷனக்க மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இன்றி விசாரணையை நிறைவு செய்வதாகவும் சர்வதேச கிரிக்கட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.