முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மரண தண்டனை கைதியுமான துமிந்த சில்வா மஞ்சள் காமாலை நோய் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

துமிந்த சில்வா சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையை சிறைச்சாலைகள் ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

துமிந்த சில்வா பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.