(இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பு சாதகமாக அமைந்துள்ளது. சுற்றுலா சேவை கைத்தொழில் ஹோட்டல் துறையில் இந்தியா அதிக கவனம் செலுத்தியுள்ளது.இந்தியாவின் முதலீட்டை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (14 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பு சாதகமாக அமைந்துள்ளது.இந்தியாவிடமிருந்து 2.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவினை ஒருதுறைக்குள் மாத்திரம் வரையறுக்க முடியாது.
இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல இந்தியா முழுமையாக பங்களிப்பு வழங்கியுள்ளது.இந்தியா இலங்கைக்கு முதற்கட்டமாக 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை வழங்கியமை குறிப்பிடக்கத்தது.
சீனா, பங்களாதேஷ் உள்ளிட்ட வலய நாடுகளும் இலங்கைக்கு தொடர்ந்து பல்துறைகளில் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.இலங்கை மற்றும் இந்தியாவின் பொருளாதார கொள்கைகளின் ஒருங்கினைப்பு இலங்கைக்க சாதகமாக அமையும்.
இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் மருந்துற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறைசேவை கைத்தொழிலில் ஹோட்டல் துறையில் இந்தியா அதிகம் கவனம் செலுத்தியுள்ளது.இந்தியாவின் முதலீடுகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
இலங்கையில் பௌத்த சாசன பாதுகாப்பிற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி 15 மில்லியன் டொலர் ஒதுக்கீடு ஊடாக விசேட நிதியத்தை உருவாக்கியுள்ளார்.இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் ஊடாக அந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM