(எம்.ஆர்.எம்.வசீம்)
மங்கள சமரவீர எரிபொருள் விலை சூத்திரம் கொண்டுவந்தபோது அதனை விமர்சித்தவர்கள் தான் தற்போது விலை சூத்திரம் கொண்டுவரப்போகின்றனர்.
விலை சூத்திரம் பாரியதொரு விடயமல்ல. என்றாலும் புத்தியை பாவித்து தயாரிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் வரைபு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
உலகில் அதிகமான நாடுகளில் விலை சூத்திரம் தயாரிக்கப்படுகின்றது. அதனை தயாரிக்கும்போது மிகவும் சிந்தித்து செயற்படவேண்டும்.
எமது ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர எரிபொருள் விலை சூத்திரம் தயாரித்து நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் எரிபொருள் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
ஆனால் மங்கள சமரவீரவின் எரிபொருள் விலை சூதிதிரத்தை அன்று கடுமையாக விமர்சித்தார்கள். அவ்வாறு விமர்சித்தவர்கள்தான் தற்போது விலை சூத்திரம் கொண்டுவருவதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் 2020 ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மரை பெறுமானத்துக்கு வந்தது. ஆனால் எமது நாட்டில் எரிபொருளின் விலை குறைத்து அதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்கவில்லை.
விலை சூத்திரத்தினால் இடம்பெறுவது, உலக சந்தையில் விலை குறையும்போது அதன் நன்மை முழுமையாக நுகர்வோருக்கு கிடைப்பதாகும். அதேபோன்று விலை அதிகரிக்கும்போது அதன் வரி அதிகரிப்பும் நுகர்வோருக்கு தாக்கம் செலுத்தும்.
என்றாலும் விலை சூத்திரம் தயாரித்து அதன் விலை ஏற்ற இறக்கத்தை குறைத்துக்கொள்ள எங்களுக்கு வரைபொன்றை தயாரித்துக்கொள்ள முடியும். அதற்குள் விலை கூடி, குறையலாம்.
இவ்வாறான விலை சூத்திரம் உலகில் அனைத்து நாடுகளிலும் இருக்கின்றது. இது பாரியதொரு விடயமில்ல. என்றாலும் புத்தியை பாவித்து விலை சூத்திரத்தை சரியாக தயாரிக்கவேண்டும்.
என்றாலும் தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பதை கருத்திற்கொண்டு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலை அதிகரித்திருக்கின்றது. அதனையும் விட சிபெட்கோ நிறுவனம் விரைவில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பது நிச்சயமாகும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM