ஸ்ரீ அரவிந்தரின் யோக காவியம் – 07

14 Feb, 2022 | 02:48 PM
image

(ஸ்ரீ ஸக்தி சுமனன்)

அசல் நிலையில் உள்ள நான்கு வெளிப்பாடுகளான ஒளிமயமான உணர்வு, ஆனந்தம், சத்தியம், அமரத்துவம் ஆகிய இந்த வெளிப்பாடுகள் பிராண தளத்தினை ஆன்மா அடையும் போது நடைபெற ஆரம்பிக்கின்றன.

இப்படி ஒவ்வொரு வெளிப்பாடும் மூலசக்தியில் இருந்து நிகழும் போது, நடைபெறும் தவறுகளைச் சரி செய்ய அடுத்த வெளிப்பாடு நிவர்த்தி செய்ய முனைகிறது. 

அதாவது மூல சக்தியாக இருந்த ஒன்று ஒளிமயமான ஆன்மாவாக உருப்பெறும் போது அது ஒருவித பற்றாக்குறையை அடைகிறது  அதை நிவர்த்திசெய்ய தனக்குள் ஆனந்தத்தை நிரப்பிக் கொள்கிறது. 

இப்படி ஆனந்தத்தை நிரப்பும் போது ஏற்படும் பற்றாக்குறைக்காக சத்தியத்தன்மையினை தன்னுள் நிரப்பிக்கொள்கிறது.  சத்தியத்தன்மை வெளிப்படும் போது ஏற்படும் பற்றாக்குறையை சரி செய்ய அமரத்துவத்தினை ஏற்றுக்கொள்கிறது.

இந்த வெளிப்பாட்டில் ஆனந்த மயமான வெளிப்பாடுகளையே கடவுளர் என்று ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார்.  அதாவது மூல பராசக்தியிலிருந்து ஒளிமயமான உணர்வு சக்தி தோன்றி விட்டது. 

ஆனால் இன்னும் ஆனந்தமயமான கடவுளர்கள் இன்னும் விழிப்படையவில்லை என்று காவியத்தின் முதல் வரியைத் தொடங்குகிறார். 

அதாவது உணர்வு ஒளிமயமானதாக இருக்கிறது. இன்னும் அதற்குள் ஆனந்த சக்தி விழிப்படையவில்லை என்பது இந்த வரியின் அர்த்தம்.

இந்த வரியில் ஸ்ரீ அரவிந்தர் கூறவரும் செய்தி மூல பராசக்தியிலிருந்து ஒளி நிறைந்த ஆன்மா/உணர்வு சக்தி உருவாகிவிட்டது. 

அதன் இரண்டாவது வெளிப்பாடான கடவுள் தன்மை எனும் ஆனந்த சக்தி விழிப்படைவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. 

இந்த ஆனந்த சக்தி விழிப்படைய ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக உணர்வு அனுபவிக்கப் போகும் நிலைகள் எவை என்பது பற்றி அடுத்த வரிகள் உரையாடப் போகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right