(சுபத்ரா)
புறக்கோட்டை கறுப்புச் சந்தை டொலர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்தமை தொடர்பிலும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெளிப்படுத்திய கருத்துக்கள், தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன.
கறுப்புச் சந்தையில் டொலர்களைப் பெற்றக் கொண்ட விவகாரம், சர்வதேச நாணயப் பரிமாற்றம் தொடர்பான சட்டங்களை மீறுவதாக அமைந்திருப்பதுடன், வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியது, ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரானது என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன.
பஷில் ராஜபக்ஷவின் கருத்து வெளியானதுமே அதன் பாரதூரத்தன்மை கருதி, அவ்வாறு அவர் கூறவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுக்கு தெளிவுபடுத்தியதாக வெளிவிவகார அமைச்சினால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால், பஷில் ராஜபக்ஷ எதையும் கூறவில்லை. செய்தியாளர் சந்திப்பில் அதுகுறித்துக் கேள்விகளை எழுப்பிய போது, அவர் தனது கருத்துக்களை மறுக்கவில்லை.
அதனைக் கிளறி சர்ச்சைகளை உருவாக்கி விடாதீர்கள் என்று மட்டுமே, ஊடகங்களைப் பார்த்து கோரிக்கை விடுத்தார், மேற்படி இரண்டு கருத்துக்களில் இருந்து பஷில் ராஜபக்ஷ விலகிக் கொள்வதாகத் தெரியவில்லை.
இந்தநிலையில், பஷில் ராஜபக்ஷ ஐ.நா. தீர்மானத்தை மீறி, தமிழர்களை இனப்படுகொலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை வாங்கியிருப்பதாகவும், இதுதொடர்பாக பஷில் ராஜபக்ஷவை அமெரிக்கா விசாரிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-13#page-3
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM