இலங்கையுடனான அடுத்த ஆட்டங்களில் ஸ்மித்துக்கு ஓய்வு

Published By: Vishnu

14 Feb, 2022 | 11:55 AM
image

இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய டி:20 கிரிக்கெட் ஆட்டங்களில் ஸ்டீவ் ஸ்மித் விளையாட மாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி:20 ஆட்டத்தில் சிக்ஸர் ஒன்றை தடுக்கும் முயற்சியில் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார முயற்சியில் அவரின் தலை தரையில் மோதியது. இதனால் அவருக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டது.

Medical staff attend to Steve Smith

இந் நிலையில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர், மூளையதிர்ச்சி பயத்தில் இருந்து முழுமையாக குணமடைவதற்காக இலங்கையுடனான எதிர்வரும் ஆட்டங்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் ஸ்டீவ் ஸ்மித் அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்காக முழுத் தகுதியுடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு சிட்னி மைதானத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி:20 போட்டியின் களத்தடுப்பு சம்பவத்திற்குப் பிறகு ஸ்மித்துக்கு அவுஸ்திரேலிய மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்தனர்.

கிரிக்கெட் அரங்கில் ஸ்மித் தலையில் அடிபட்டு அதிர்ச்சியடைவது இது முதல் சந்தர்ப்பம் அல்ல. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸில் நடந்த ஆஷஸ் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்துப் பகுதியை பதம் பார்த்தது.

2020 இல் இங்கிலாந்தில் நடந்த வெள்ளை பந்து தொடரிலும் ஸ்மித் உபாதைக்குள்ளாகி வெளியேறியிருந்தமையும் குறிப்பிடத்கத்கது.

இதேவ‍ேளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை அவுஸ்திரேலியா நேற்று சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்ரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச சிலம்பம் போட்டியில் 2 ஆம்...

2023-05-28 13:45:55
news-image

டோனி போன்ற தலைவரை மீண்டும் நாங்கள்...

2023-05-28 13:55:26
news-image

கில் அபார சதம், மோஹித் 5...

2023-05-27 06:06:16
news-image

பங்களாதேஷை இலகுவாக வீழ்த்தியது இலங்கை :...

2023-05-26 21:01:08
news-image

மொத்தமாக 325 புள்ளிகளை பெற்றுக்கொண்ட விமானப்படையின்...

2023-05-26 18:27:35
news-image

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மூஸ் ஆடைகள்

2023-05-26 15:50:27
news-image

உலக டெஸ்ட் சம்பியனுக்கு 48 கோடி...

2023-05-26 15:50:51
news-image

ஆப்கான் தொடரில் ஹசரங்க இடம்பெறமாட்டார் ?

2023-05-26 12:44:53
news-image

சவோனா 100 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

2023-05-26 11:47:51
news-image

மதீச பாதுகாப்பான கரங்களில் உள்ளார் -டோனியை...

2023-05-26 11:11:06
news-image

மேற்கிந்திய வீரர் டெவோன் தோமஸ் ஐசிசியினால்...

2023-05-26 09:55:20
news-image

ஒலிம்பிக் விழாவுக்கு முன்னர் குழப்பத்தில் பிரான்ஸ்...

2023-05-25 21:40:27