(சிவலிங்கம் சிவகுமாரன்)
எமது நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் பற்றி ஆங்கில, சிங்கள பத்திரிகைகளின் பிரதிபலிப்புகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.
பிரபல ஆங்கில வார இதழ் ஒன்றில் பிரபல சட்டத்தரணி ஒருவர் சுதந்திர தினம் பற்றிய தனது பத்திக்கு இவ்வாறு தலைப்பிட்டிருந்தார், ‘ இலங்கையின் கடந்த கால மன்னர்கள் மற்றும் நிகழ்கால யாசகர்கள் பற்றிய பிரதிபலிப்புகள் ”.
தலைநகரில் கொண்டாடப்பட்ட தேசிய சுதந்திர தின நிகழ்வின் போது நாட்டை மீட்டெடுக்கும் போராட்டங்களில் பங்காற்றிய மன்னர்களின் வீர பிரதாபங்களை பெருமை பொங்க பேசியிருந்தார் ஜனாதிபதி.
2500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றில் இலங்கை அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்குட்பட்டதாகவே இருந்ததாகவும் துட்டகைமுனு, வலகம்பா, மஹா பராக்கிரமபாகு, விஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு போன்ற சிறந்த மன்னர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்டு ஒன்றுபடுத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னர் 450 ஆண்டுகளாக ஐரோப்பிய காலனித்துவத்தின் கீழ் எமது நாடு இருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகும் கூட, மூன்று தசாப்த கால யுத்தத்தில் நாடு இரண்டாக பிளவு பட்டிருந்ததாகவும் அதற்கு எதிராக போராட வேண்டிய நிர்பந்தம் தமக்கு நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பெருமைக்காகவும் கெளரவத்துக்காகவும் எமது நாட்டுக்காக போராடிய மன்னர்களையும் உயிர்நீத்த தியாகிகளையும் நினைவுகூருவதில் தவறில்லை. மன்னராட்சி காலத்தில் மன்னர்கள் இருந்தனர், தற்போதைய நவீன காலத்தில் அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-13#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM