பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்வதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கும் வகையில் ‘சர்வ ஜன நீதி’ அமைப்பினால் நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி பெப்ரவரி 15 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்த பிரச்சாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் சர்வ ஜன நீதி அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கசட்டம் இயற்றப்படும் என்று அரசாங்கம் கடந்த காலங்களில் பல உறுதிமொழிகளை வழங்கியது. 

எவ்வாறாயினும், அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தச் சட்டமூலமானது அத்தகைய உத்தரவாதங்களுக்குப் பற்றாக்குறையாக உள்ளது மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள எந்தவொரு கடுமையான விதிகளையும் நிவர்த்தி செய்யத் தவறிவிட்டது.

இந் நிலையில் முன்னெடுக்கப்படும் நாடு தழுவிய பிரச்சாரம் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துவதாகும். 

கொழும்பில் கையெழுத்துப் பிரச்சாரம் 2022 பெப்ரவரி 15 ஆம் திகதி செவ்வாய்கிழமைகாலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்படும்.

தயவு செய்து எங்களுடன் சேர்ந்து, PTA ஐ இரத்து செய்வதற்கான மனுவில் கையெழுத்திடுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Image