பிரித்­தா­னிய புகை­யி­ர­தத்தில் தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­போ­வ­தாக அச்­சு­றுத்தல் விடுத்த இலங்கைத் தமிழர் ஒரு­வ­ருக்கு அந்­நாட்டு நீதி­மன்­ற­மொன்று 10 மாத சிறைத்­தண்­டனையை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

 இந்த வழக்குத் தொடர்பில் பிரித்­தா­னிய ஊட­கங்கள் நேற்று முன்­ தினம் சனிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. சுரேஷ்­குமார் துரை­ராஜா (44 வயது) என்ற மேற்­படி 

 இலங்கைத் தமிழர் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி லிவர் லைம் வீதி புகை­யி­ர­த­நி­லை­யத்­திற்குள் பிர­வே­சித்த போது, புகை­யி­ரத நிலைய உத்­தி­யோ­கத்தர் ஒருவர் அவரை வழி­ம­றித்து பய­ணச்­சீட்டைக் காண்­பிக்­கு­மாறு அவரைக் கோரி­யுள்ளார்.

 இதன்­போது பய­ணச்­சீட்டு எத­னையும் வைத்­தி­ராத சுரேஷ்­குமார், தான் புகை­யி­ர­தத்தில் குண்டுத் தாக்­குதல் நடத்தப் போவ­தாக அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து அவர் பிரித்­தா­னிய போக்­கு­வ­ரத்துப் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டார். எனினும் அவ­ரிடம் மேற்­கொண்ட தேடுதல் நட­வ­டிக்­கையில் அவ­ரிடம் குண்டு எதுவும் இருக்­க­வில்லை.

அவர் புகை­யி­ர­தத்தின் முன் பாய்ந்து தற்­கொலை செய்து கொள்­ளவே அங்கு வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இதன்­போது சுரேஷ் குமார் தற்­கொலை செய்து கொள்­ளு­மாறு தனது தலையில் ஒரு குரல் கட்­ட­ளை­யிட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

 இலங்­கையில் விடு­தலைப் புலி­க­ளுக்­காக உளவு பார்த்­த­தாக அவர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு அவரைக் கைது­செய்ய பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது..

 பிரித்­தா­னிய பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்ட அவர் சிகிச்­சைக்­காக மன­நல மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்தார்.

அவரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் இலங்­கையில் அவர் சந்­தித்த .பயங்­க­ர­மான நிகழ்ச்­சி­களால் அவர் மோச­மான மன அழுத்­தத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்­தனர்.

பிரித்­தா­னி­யாவில் இதற்கு முன்னர் வேறு எந்தக் குற்­றச்­சாட்­டுகள் நிமித்­தமும் கைது­செய்­யப்­ப­டாத சுரேஷ்­குமார் , தொண்டு பணி­களில் தானாக முன்­வந்து ஈடு­பட்டு வந்­துள்ளார்.

அவர் பிரித்­தா­னி­யா­வி­லான அவ­ரது புக­லி­டக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டதால் மிகவும் மனம் உடைந்து போயி­ருந்­த­தாக அவ­ரது சார்பில் வாதா­டிய சட்­டத்­த­ரணி எறிக் லாம்ப் தெரி­வித்தார்.

 இந்­நி­லையில் மேற்­படி வழக்கை விசா­ரித்த லிவர்பூல் கிறவுண் நீதி­மன்ற நீதி­பதி அனில் முர்ரே, சுரேஷ்குமாரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதை விடவும் அந்த அச்சுறுத்தல் அங்கு பீதியும் பதற்றமும் ஏற்படக் காரணமாகவிருந்ததாக தெரிவித்து அவருக்கு 10 மாத சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.