(லோகன் பரமசாமி)
வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பான நேட்டோ அமெரிக்கா மற்றும் இதர மேலைத்தேய நாடுகளான பிரித்தானியார,பிரான்ஸ்,கனடா, டென்மார்க், நோர்வே ஆகியவற்றுடன் இன்னும் ஏழு ஐரோப்பிய நாடுகள் உள்ளீர்க்கப்பட்டு 1949ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மேலைநாடுகளின் தாராள பொருளாதாரக் கொள்கை, ஜனநாயகம் ஆகியவற்றை அன்றைய சோவியத் சோசலிச குடியரசின் கம்யூனிச சித்தாந்த ஆட்சியின் பரம்பல் ஐரோப்பிய நாடுகளில் வேரூன்றாது இருக்கும் பொருட்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் நேட்டோ தன்னை அவ்வப்போது விரிவுபடுத்தியே வந்தது.

1952ஆம் ஆண்டிலிருந்து 1982ஆம் ஆண்டிற்குள் நேட்டோவுடன் கிரேக்கம், துருக்கி,மேற்கு ஜேர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் இணைந்து கொண்டன.
இரண்டாம் உலகப்போரின் பின்பு மேலைத்தேய சர்வதேச ஒழுங்கு வழிநடத்தலின் படியே உலகில் தன்னை உறுதியான பொருளாதார நாடாக வலுப்படுத்தி கொள்ள முடியும் என்பதை மேற்கு ஜேர்மனி உணர்ந்து 1955 இல் நேட்டோவுடன் இணைந்தது.
மேற்கு ஜேர்மனியின் இணைவு நேட்டோவின் கிழக்கு நோக்கிய நகர்வாக தென்பட்டது.
இதனால் தனது கட்டுக்குள் இருக்கும் கிழக்கு ஜேர்மனியை பாதுகாக்கும் வகையிலும் தனது பாதுகாப்பிற்கு ஏற்படக் கூடிய சவால்களை முன்நிறுத்தியும் நகர்வொன்றைச் செய்தது.
அதாவது தனது ஆதரவு நாடுகளை இணைத்துக் கொண்டு புதியதொரு சர்வதேச அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பு 'வோர்சோ நாடுகள்' என்று அழைக்கப்பட்டது.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சோவியத் சிதைந்து போய்விடவும் 'வோர்சோ அமைப்பும்' கலைந்து போய்விட்டது, இருந்த போதிலும் நேட்டோவின் வளர்ச்சி தொடர்ந்த வண்ணமே இருந்தது.
1999ஆம் ஆண்டு நேட்டோவில் மேலும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இணைந்தன, அவற்றுள் போலந்து, செக் குடியரசு, ஹங்கேரி ஆகியன முக்கியமானவை இவை முன்னர் சோவியத்தின் கட்டுக்குள் இருந்தவை.

இந்த நடவடிக்கையானது ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் அமெரிக்க தலைமையை ஏற்றுக்கொண்ட தாராள கொள்கையைக் கொண்டதொரு மேற்குலகை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டது.
மேலும் 2004ஆம் ஆண்டிலிலுந்து 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நேட்டோவின் கிழக்கு நோக்கிய நகர்வு எஞ்சியிருந்த ஐரோப்பிய நாடுகளையும் முன்னாள் சோவியத் குடியரசுக்குள் இருந்த ஏனைய நாடுகளையும் இணைக்கும் வகையில் விரிவாக்கம் பெற்றது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-13#page-8
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM