கினிகத்தேனையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

By Vishnu

14 Feb, 2022 | 10:31 AM
image

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விலங்குகளை வேட்டையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின் கம்பிகளில் சிக்குண்டே நபரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கினத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right