லிந்துலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 வயது முதியவர் பலி

By Vishnu

14 Feb, 2022 | 10:20 AM
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஸ்தலத்திலேயே உடல் கருகி பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் பலியான நபர் லெம்லியர் தோட்டத்தை சேர்ந்தவர் ஆவார். 

குறித்த தீ விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. 

இந்த உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த போது உடையில் பரவிய தீ யின் காரணமாகவே முதியவர் பலியாகி இருக்க கூடும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை காவல்துறை முன்னெடுத்து வரும் நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக சடலமானது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right