ஆசிய வலையத்தின் பொதுவாக தாக்கம் செலுத்தும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடும் ஆசிய ஒத்துழைப்பு மாநாடு 34 நாடுகளின் பங்குபற்றுகையுடன் தற்போது பாங்கொக் நகரில் நடைபெற்று வருவதுடன் அதன் அரச தலைவர்கள் மாநாடு இன்று நடைபெற உள்ளது.

இன்று முற்பகல் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரச தலைவர்கள் மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார்.

ஆசியாவின் உற்பத்தித் திறனை அதிகரித்து உலகில் அதிக போட்டித் தன்மைவாய்ந்த ஒரு வலையமாக ஆசிய வலையத்தை ஆக்குவது எவ்வாறு என்பது தொடர்பாக இந்த அரச தலைவர்கள் மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதோடு அது தொடர்பாக பலபொது இணக்கப்பாடுகளும் எட்டப்படவுள்ளது. 

இலங்கைக்கும் ஏனைய ஆசிய நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேலும் எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது உரையில் விளக்கவுள்ளார்.