(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளால் சர்வதேசம் இலங்கை மீது கொண்டிருந்த நம்பிக்கை முற்றாக இழக்கப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேசத்திடமிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளும் பூச்சியமாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

அழுத்தங்களிலிருந்து தப்பவே ரிசாத்தின் கைது - நளின் பண்டார | Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட்  தீவிரமடைந்திருந்த கால கட்டத்தில் சுகாதார தரப்பினர் அனைவரும் அயராது பாடுபட்டு உழைத்தனர். அவர்களின் அர்ப்பணிப்பை அரசாங்கம் மறந்துள்ளது.

சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் பெரும்பாலானவை நியாயமானவையாகும். எனவே அரசாங்கம் அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வினை வழங்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் நாட்டிலுள்ள வேறு எந்த பிரச்சினைகள் குறித்தும் சிந்திக்காது கடன் தவணையை எவ்வாறு மீள செலுத்துவது , அதற்கான டொலரை எவ்வாறு பெறுவது என்பது குறித்து மாத்திரமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டில் எஞ்சியுள்ள தங்கத்தை விற்று , இருப்பிலுள்ள சுமார் மில்லியன்களில் சிறு தொகை கடனை மீள செலுத்திவிட்டு அதன் பின்னர் என்ன செய்வது என்ற எந்த திட்டமிடலும் அரசாங்கத்திடம் இல்லை.

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் சர்வதேசம் இலங்கை மீது கொண்டிருந்த நம்பிக்கை முற்றாகக் இழக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேசத்திடமிருந்து கிடைக்கப் பெறும் உதவிகள் , ஒத்துழைப்புக்கள் , நிவாரணங்கள் பூச்சியமாகியுள்ளன என்றார்