நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஐவர் பலி

Published By: Digital Desk 4

13 Feb, 2022 | 06:06 PM
image

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்துகளில் இளைஞரொருவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Articles Tagged Under: பலி | Virakesari.lk

வட்டுகோட்டை

யாழ் வட்டுகோட்டை பொலிஸ் பிரிவில் காரைநகர் வீதியில் செட்டியார்மடம் பிரதேசத்தில் யாழ்பாணத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மதிலில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த காயமடைந்த மோட்டார்சைக்கிளில் சென்ற நபர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 22 வயதுடைய முல்லைத்தீவு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆவார். வட்டுகோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

வத்தேகம

வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேகமை- எல்கடுவை வீதியில் லொறி வேக கட்டுபாட்டை இழந்து பாதையை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளது.  விபத்தில் காயமடைந்த லொறி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை பொலிசார் தெரிவித்துள்ளனர். சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பில் வத்தேகம பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மொரகஹேன

மொரஹேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு-ஹோரனை பிரதான வீதியில் கொழும்பு நோக்கி பயணித்த கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகிய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மோட்டார்சைக்கிளில் சென்ற நபர் ஹொரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மோட்டார்சைக்கிள் சாரதியின் கவனயீனமே விபத்துக்காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரகஹேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

களுத்துறை

களுத்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதியில் கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் பாதசாரியொருவர் மீது மோதியதில் காயமடைந்த பாதசாரதி களுத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 68 வயதுடைய களுத்துறை வடக்கு வஸ்குடவை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். விபத்து தொடர்பில் களுத்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏகோடஉயன 

ஏகோடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி-கொழும்பு பிரதான வீதி முகத்துவாரம் சுற்றுவட்டத்தில் முச்சக்கர வண்டியொன்று சைக்கியொன்றின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த சைக்கிளில் சென்ற நபல் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 75 வயதுடைய மொரட்டுவை - முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவராவார். முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏகொடஉயன பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21