பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம் இவ்வாரம்  அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இச் சட்டமூலம் தற்போது அமைச்சரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருவதாகவும் நம்பகரமான அரச தகவல்கள்  தெரிவித்தன.  

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

சட்டம் மற்றும் ஒழுங்கு  அமைச்சர் சாகல ரட்ணாயக்க முப்படைகளின் தளபதிகள் பாதுகாப்பு செயலாளர் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் ஆலோசனைகள் பெறப்பட்டு  மேற்படி சட்டமூலம் தொடர்பான நகல் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அரசியலமைப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் அதற்கு பதிலாக சர்வதேச தரப்பில் அமைந்த புதிய சட்டம் உருவாக்கப்படும் என்றும் ஐ.நா.விடமும் சர்வதேசத்திடமும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.