மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரசபை பிரிவில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஏழுபேரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களுள் நால்வரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும் ஏனைய மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ச்சியாக வீடுகளில் இடம்பெற்றுவரும் கொள்ளைச்சம்பவங்களினால் மக்கள் பெரும் பதற்றநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.