(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் சிவில் யுத்தம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துள்ளநிலையில் இன்றும் அதிகார பகிர்விற்கான நிலையான பொறிமுறை ஒன்று அடையாளப்படவில்லை .

சர்வதேசம் எதிர்பார்க்கும் தேசிய நல்லிணக்கம் நாட்டில் பூரணப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

பெரும்பான்மையை ஜனாதிபதி கோத்தாபயவுக்கு பெற்றுக் கொடுக்க இணைந்து  செயற்படுவதாக மைத்திரி தெரிவிப்பு! | Virakesari.lk

தென்கொரியாவில் கடந்தவாரம் இடம்பெற்ற சமாதானம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சமாதானம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுவது இலங்கைக்கு கிடைத்த பெருமை என கருதுகிறேன்.

இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையில் வரலாற்று காலம் தொடக்கம் பொருளாதாரம்,முதலீடு,தொழிற்துறை உள்ளிட்ட பல்துறையில் காணப்படும் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பு சமாதானத்தையும்,ஐக்கியத்தையும் கேள்விக்குள்ளாக்கும் தென்கொரியாவிலும் இவ்வாறான தன்மை ஆரம்ப காலத்தில் காணப்பட்டது.

தற்போது அந்நிலைமை மாற்றம் பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது.தேசிய நல்லிணக்கம் பொருளாதார முன்னேற்றத்தின் பிரதான அம்சமாக காணப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் இலங்கையர்கள் பரம்பரை அலகுகளாக ஐக்கியத்துடன் ஒன்றினைந்திருந்தார்கள்.இலங்கையர்கள் மத்தியில் கலை,கலாசாரம்,மதம் மற்றும் பாரம்பரிய சம்பிரதாயங்கள் உள்ளிட்ட துறைகளில் நல்லிணக்கம் காணப்படடதால் இலங்கை 'சிலோன்'என அடையாளப்படுத்தப்பட்டது.பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற இலங்கையர்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடினார்கள்.

இருப்பினும் தேசிய மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களினால் பொறாமை,எதிர்ப்பு,இனங்களுக்கிடையில் பிளவுகள் தோற்றம் பெற்று அது அரசியல் பிரச்சினையாக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அரசிற்கு எதிரான போராட்டங்கள் தலைதூக்கின.65,000கிலோமீற்றர் சதுர பரப்பரளை கொண்ட இலங்கை தீவினை எல்லை அடிப்படையில் பிளவுப்படுத்த தீவிரவாத தரப்பினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

நாட்டுக்குள் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு சமாதான முறையில் தீர்வு காண அரசு பல்வேறுக்கட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்தது.நோர்வே அரசாங்கத்தின் தலையீட்டில் இலங்கையில் 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது.

.இலங்கையில் காணப்பட்ட தீவிரவாதத்தை சமாதான முறைமையின கீழ் நிறைவிற்கு கொண்டு வர முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் இறுதியில் தோல்வியடைந்தன.

யுத்த மார்க்கத்தில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர வேண்டியிருந்தது.2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அமைதி,சமாதானம்,

நல்லிணக்கம்,ஜனநாயகம் ஆகியவற்றை இலங்கையில் உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது பொதுச்செயலாளர் பான்கி மூன் முன்னேற்றகரமான தீர்மானங்களை முன்னெடுத்தார்.முரண்பாடுகளுக்கு யுத்தம் தீர்வாக அமையாது.இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்பட்டது.

இலங்கையில் சிவில் யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவிற்கு கொண்டுவரப்பட்டது.12 வருடம் கடந்துள்ள நிலையில் இன்றும் நிலையான அதிகார பகிர்விற்கான பொறிமுறை வகுக்கப்படவில்லை.சர்வதேசத்தின் மதிப்பீட்டிற்கமைய தேசிய நல்லிணக்கம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.