உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்காக விசேட நிபுணர் றீட்டா ஐசாக்   இன்று இலங்கை வருகின்றார்.  

10 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் வடக்கு , கிழக்கு மற்றும் மத்திய மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து சிறுபான்மை இன மக்களின் சமகால நிலைமைகளை ஆராயவுள்ளார்.

அத்துடன் அரச தரப்பு எதிர்த்தரப்பு  முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளையும்  றீட்டா ஐசாக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  

இலங்கை விஜயத்தின் நிறைவில் கொழும்பில் ஊடகவியலாளர்களை 20 ஆம் திகதி சந்திக்கும்  விசேட நிபுணர் , நிலைமைகள் தொடர்பாக பரிந்துரைகளையும் செய்ய உள்ளார். 

விசேட நிபுணர் றீட்டா ஐசாக் நிதியா , இலங்கை விஜயத்தின் முழுமையான அறிக்கையை 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க  உள்ளமை குறிப்பிடத்தக்கது.