(ஆர்.ராம்)
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் திருவிழாவிற்கு இந்தியர்களை அனுமதிப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடுமையான பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே நடைபெறும் குறிப்பாக தமிழக கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் நேரடியான பேச்சுவார்த்தையொன்று அவசியமாக இருந்தால் அதனை முன்னெடுப்பதற்கும் அவர் தயராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்தவாரத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழகத்தில் உள்ள கடற்றொழிலாளர்களை மெய்நிகர் வழியிலும், தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுடன் தொலைபேசி வாயிலாகவும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் அவற்றின் முன்னேற்றகரமான நிலைமைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரு நாடுகளின் கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வதே எனது விருப்பமாகும். அதேநேரம் எமது மீனவர்களையும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தினையும் கடல்வளத்தினையும் பாதுகாப்பதும் எனது கடமையுமாகும்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு என்னுடன் தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தையொன்றை நடத்தியிருந்தார். அதில் இந்தியர்களை கச்சதீவு திருவிழாவில் பங்கேற்பதற்கான வழிவகைகளை செய்யுமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில் நான் உடனடியாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குறித்த விடயத்தினை உள்ளடக்கி கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளேன்.
அதேநேரம், தமிழக கடற்றொழிலாளர்களுடன் மெய்நிகர் வழியில் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுத்திருந்தேன். தமிழகத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகரகத்தின் ஏற்பாட்டில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதன்போது கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான பரஸ்பர பேச்சுவார்த்தைகள் பற்றிய கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆகவே கடற்றொழிலாளர்களுக்கு இடையிலோ அல்லது என்னுடனோ பேச்சுவார்த்தைகளை செய்வதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை. கச்சதீவு திருவிழாக் காலத்தில் கூட வேண்டுமானால் நேரடியான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளேன் என்றார்.
இதேவேளை, இன்றையதினம் வடமராட்சி;க்குச் செல்லவுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள கடற்றொழிலாளர் சங்கங்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM