கொழும்பு நகர மண்டப பகுதியில் அமைந்துள்ள  இரவு விடுதி  ஒன்றினுள் நேற்று இரவு புகுந்த ஒரு குழுவினர், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரியை தாக்கியுள்ளனர்.

அத்தோடு குறித்த விடுதிக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நபர்களின் தாக்குதல் காரணமாக இரவு நேர விடுதியின் பாதுகாப்பாளர் தற்போது வரை அவசர கிசிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜீவன் பிரேமதாஸ என்ற நபரே இவ்வாறு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இரவு நேர விடுதியிற்கு வருகை தந்த குழுவினரில் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவருடன் வந்தவர்களுக்கு உள்ளே அனுமதி வழங்கப்படாமையே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.