யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது யுத்தத்தை நிறுத்துமாறு சில மேற்கு நாடுகள் என்னிடம் வலியுறுத்தின. ஆனால் நான் அதனை நிராகரித்து விட்டேன். அதனால் தான் மேற்கு நாடுகள் என்னுடன் சிக்கலுக்குள்ளாகின. அந்த வலியுறுத்தலை கேட்டு நான் யுத்தத்தை நிறுத்தியிருந்தால் மேற்குலகம் என்னுடைய நண்பனாக இருந்திருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். 

ஆங்கில ஊடகமொன்றிற்கு விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.