பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி சர்வதேசத்தை நாடுவது காட்டிக்கொடுப்பல்ல - அருட் தந்தை சிறில் காமினி

Published By: Digital Desk 3

12 Feb, 2022 | 01:45 PM
image

(எம். எம். சில்வெஸ்டர் )

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேசத்தின் ஆதரவைப் பெறுவதானது, நாட்டை காட்டிக் கொடுக்கும் முயற்சி அல்ல.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காகவே சர்வதேசத்தின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

எமது இந்த போராட்டத்திற்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையும் தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக  கொழும்பு மறை மாவட்ட அருட் தந்தை சிறில் காமினி அடிகளார் 'வீரகேசரி'க்கு தெரிவித்தார். 

இலங்கை கத்தோலிக்க திருச்சபை எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலின்படி செயல்படுவதாக கூறப்படுவதை முழுமையாக மறுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து பரிசுத்த பாப்பரசருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் அனுப்பியிருந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை இவ்விடயம் தொடர்பில் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக அருட் தந்தை சிறில் காமினி குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் 'வீரகேசரி'க்குத் தெரிவிக்கையில், 

"உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் ஆகப்போகின்றன. இருப்பினும் இதுவரை  சூத்திரதாரி யார் என கண்டறியப்படவில்லை. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தியில் உள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின்  பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை கத்தோலிக்க திருச்சபை விரும்புகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மாபெரும் சூழ்ச்சி நடைபெற்றுள்ளதாக அப்போதைய சட்ட மா அதிபர் தப்புள டி லிவேரா தெரிவித்திருந்தார். தப்புள டி லிவேரா வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களம் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துக்கு அரசாங்கம் நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தவறினால், சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை தயாராகவே உள்ளது. எமது  இந்த நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இலங்கை கத்தோலிக்க திருச்சபைக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை தனது பூரண ஆதரவை வழங்குதாக கூறியிருந்தார்.

மேலும், இவ்விடயம் குறித்து சர்வதேச சமூகத்துக்கும் வெளிநாட்டில் வாழும் இலங்கை கத்தோலிக்கர்களுக்கும் விளக்கமளிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சர்வேதசத்தின் ஆதரவைப் பெறுவ‍தென்பது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் முயற்சியாக கருதாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கருதவும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.யார் ஆட்சியில் இருந்தாலும்  நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று...

2023-12-10 13:00:20
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10