ஐ.பி.எல். 2022 ஏலம் ஆரம்பம் ! கோடிகளில் வாங்கப்படும் வீரர்கள் யார் ?

12 Feb, 2022 | 01:42 PM
image

15 ஆவது ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடருக்கான  ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும், நாளையும் இடம்பெறுகின்றது.

May be an image of 4 people and people standing

May be an image of table and indoor

No photo description available.

அந்தவகையில் குறித்த ஏலம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணி முதல் ஆரம்பமாகி நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 

May be an image of 13 people, people standing and indoor

May be an image of table, indoor and text that says 'RAJASTHAN ROYALS'

ஏலப்பட்டியலில் மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

வீரர்களின் அடிப்படை விலை ரூபா 2 கோடி, ரூபா 1½ கோடி, ரூபா ஒரு கோடி, 75 இலட்சம், 50 இலட்சம், 40 இலட்சம், 30 இலட்சம், 20 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

May be an image of 4 people, people standing and indoor

No photo description available.

அதிகபட்ச அடிப்படை விலையான ரூபா 2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள 10 அணிகளும் தங்கள் அணியை ஒரு வலுவான அணியாக கட்டமைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும். 

No photo description available.

May be an image of 1 person, table and indoor

அதற்காக அந்த அணிகளுக்கு தேவையான வீரர்களை போட்டிபோட்டு வாங்க முயலும். இதேபோல், அந்த அணிகள் தக்க வைக்க தவறிய வீரர்களை மீண்டும் அணியில் இணைக்க ஏலத்தில் முடிந்தவரை போராடும். 

May be an image of indoor

இந்த ஏலத்தில் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்கூர், டேவிட் வார்னர், இஷான் கி‌ஷன், தீபக் சாஹர், ஜேசன் ஹோல்டர், யுஸ்வேந்திர சாஹல், ரபடா, தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் போன்ற வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வாய்ப்புள்ளது. 

May be an image of table and indoor

இதேபோல் ஜூனியர் உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய இளம் வீரர்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அஸ்வினை 5 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ரோயல்ஸ்!

May be an image of 1 person and text

ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை, 5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி. டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையே சில கடுமையான போட்டி நடந்த நிலையில் அஸ்வினை 5 கோடிக்கு வாங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ்.

May be an image of drink

ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person

ஷிகர் தவானுக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் ரூ. 2 கோடிக்கு ஏலத்தைத் தொடங்கியது, பின்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் குதித்தது. இரண்டிற்கும் இடையே ஏலம் முன்னும் பின்னுமாக சென்றது. தவானின் ஏலம் 5 கோடியைத் தாண்டியதால் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் இரண்டும் பின்வாங்கின. இறுதியில் நுழைந்த பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் அவரை 8.25 கோடிக்கு வாங்கியது.

May be an image of table and indoor

May be an image of table and indoor

May be an image of table, indoor and text that says 'GUJARAT TITANS GUJARAT TITANS M'

பெட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியால் 7.25 கோடிக்கு வாங்கப்பட்டார்

May be an image of 1 person

ஐபிஎல் மெகா ஏலத்தில் அவுஸ்திரேலியா வீரர் பெட் கம்மின்ஸை 7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

 

ககிசோ ரபாடா 9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்

May be an image of 1 person and text that says '3 IPL TATA AUCTION INR 9.25 CR KAGISO RABADA SOLD TO PBKS PUNJAB t KINGS #TATAIPLAuction iplt20.com'

ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாபிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

 

ட்ரெண்ட் போல்ட் 8 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text that says 'B IPL A AUCTION INR 8 CR TRENT BOULT SOLD TO RR P RAJASTHAN ROYALS #TATAIPLAuction iplt20.com'

ஐபிஎல் மெகா ஏலத்தில் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்டை, 8 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி.

 

ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 12.25 கோடிக்கு வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ், 12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

 

இந்திய வீரர் முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணியால் 6.25 கோடிக்கு வாங்கப்பட்டார்.

May be an image of 1 person

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் முகமது ஷமி, ₹6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி

 

பாஃப் டு பிளெசிஸ் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியால் 7 கோடிக்கு வாங்கப்பட்டார்!

May be an image of 1 person

ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளெசிஸ் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியால் 7 கோடிக்கு வாங்கப்பட்டார்.

டேவிட் வோர்னர் 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text

ஐபிஎல் மெகா ஏலத்தில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

குயின்டன் டி கொக், 6.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text

ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி கொக், 6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

ரொபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 கோடிக்கு வாங்கப்பட்டார்!

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரொபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 கோடிக்கு வாங்கப்பட்டார்!

ஷிம்ரோன் ஹெட்மியர் 8.50 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text

ஐபிஎல் மெகா ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரோன் ஹெட்மியர்  8.50 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

மணீஷ் பாண்டே 4.60 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் மணீஷ் பாண்டே ரூ4.60 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.

தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்!

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ரவீந்திர ஜடேஜா (16 கோடி), எம்எஸ் தோனி (12 கோடி), மொயீன் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆண்ட்ரே ரசல் (12 கோடி, பர்சில் இருந்து 16 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி)

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கீரன் பொல்லார்ட் (6 கோடி)

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி)

டெல்லி கேப்பிடல்ஸ்:

ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), பிருத்வி ஷா (7.5 கோடி, 8 கோடி பர்ஸில் இருந்து கழிக்கப்படும்), அன்ரிச் நார்ட்ஜே (6.5 கோடி)

ராஜஸ்தான் ரோயல்ஸ்:

சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி)

பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் (12 கோடி, பர்ஸில் இருந்து 14 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி)

குஜராத் டைட்டன்ஸ்:

ஹர்திக் பாண்டியா (15 கோடி), ரஷித் கான் (15 கோடி), சுப்மான் கில் (8 கோடி)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

கேஎல் ராகுல் (17 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (9.2 கோடி), ரவி பிஷ்னோய் (4 கோடி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ அபார...

2024-11-14 00:25:56
news-image

குசல் மெண்டிஸ் 143, அவிஷ்க 100;...

2024-11-13 19:26:11
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைகளில் பாகிஸ்தானியர்கள்...

2024-11-13 18:38:49
news-image

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுவதை தேர்வு செய்தது

2024-11-13 14:28:26
news-image

இலங்கை - நியூஸிலாந்து அணிகள் மோதும்...

2024-11-13 12:45:14
news-image

இலங்கை அணியின் ஆலோசகப் பயிற்றுநர்; தென்...

2024-11-12 18:49:02
news-image

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான்...

2024-11-12 17:21:10
news-image

ஐசிசி அக்டோபர் மாதத்தின் அதிசிறந்த வீராங்கனை...

2024-11-12 15:03:28
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-11-11 21:41:20
news-image

அங்குரார்ப்பண ரி10 லங்கா பிறீமியர் லீக்...

2024-11-11 19:12:01
news-image

வருணின் 5 விக்கெட் குவியல் பலனற்றுப்போனது;...

2024-11-11 12:14:31
news-image

இலங்கை - நியூசிலாந்து T20 தொடர்...

2024-11-10 23:20:44