அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியிருந்த 40 செயற்கைக்கோள்கள் சூரிய புயல் தாக்குதலால் புவி வட்டப்பாதையிலிருந்து விலகி வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்துள்ளன.
இது குறித்து ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது,
“கடந்த வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் வெள்ளிக்கிழமையன்று சூரிய காந்த புயலில் சிக்கி வளிமண்டலத்தை வெப்பமாக்கியது.
இந்நிலையில், அப்போது அங்கு எதிர்பார்த்ததை விட மிகவும் அடர்த்தியான வெப்ப நிலை காணப்பட்டதாக” , ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் கடந்த வாரம் விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்த 49 சிறிய செயற்கைக்கோள்களில் 40 செயற்கைக்கோள்கள் புவி வட்டப் பாதையிலிருந்து விலகி மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்துள்ளன.
ஒரு செயற்கைக் கோளின் எடை 260 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சம்பவத்தால் புவி வட்டப் பாதையிலோ, பூமியிலோ எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.
பூமியின் சுற்றுவட்டப் பாதையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சுமாா் 2,000 செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன.
அவற்றின் மூலம் உலகின் தொலைதூர இடங்களுக்கு இணையவழி சேவை கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM