இராவணன் தொடர்பாக முறை சார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் - புத்திக பத்திரன

11 Feb, 2022 | 08:34 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாததால்  இராவணன் தொடர்பாக முறை சார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அவர் முன்வைத்துள்ள பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இலங்கை மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாத போதிலும், முறை சார்ந்த ஆய்வொன்றின் மூலம் அவர் தொடர்பாக நாட்டு மக்களின் மனப்பாங்கினை  மேம்படுத்துவதற்கும் மன்னன் இராவணனுக்கு இருந்த அறிவினை  நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கும், இலங்கை  வரலாற்றில் மறைந்து போயுள்ள  அத்தியாயமொன்றை வெளிக்கொண்டு வருவதற்கும் இயலுமாயுள்ளதால் புத்திஜீவிகள் குழுவொன்றின் மூலம் மன்னன் இராவணன் தொடர்பான ஆய்வொன்றை மேற்கொள்ளப்படுத்தல் வேண்டுமென  இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right