திக்வெல்ல - பெலியத்த வீதியில் இன்று காலை 11.20 மணியளவில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தனியாருக்கு சொந்தமான இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.