வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இன்று (11) காலை 10 மணிக்கு வவுனியா பல்கலைக்கழகத்தின் விடுதியில் அமைந்துள்ள மைதானத்தில் விசேட உலகுவானூர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷயை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன், மற்றும் பொபதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஜனக நந்தகுமார ஆகியோர் வரவேற்றிருந்தனர்.

இதனையடுத்து மைதானப் பகுதிக்கு வருகை தந்திருந்த மக்களிடம் காணிப்பிரச்சனை, விவசாயப் பிரச்சனை மற்றும் அவர்களது தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். 

இதன்போது மக்களது பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.