பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை - பிரதம கொறடாக்களுக்கிடையில்  வாக்குவாதம்

11 Feb, 2022 | 01:44 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு இதுவரை நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக ஆளும் கட்சி பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எதிர்க்கட்சி பிரமத கொறடா லக்ஷ்மன் கிரியெல்லஆகியோருக்கிடையில் நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி சபையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்றம்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. 

பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையில், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழு 2வருடமாக நியமிக்கப்படாமல் இருக்கின்றது. 

சபாநாயகராகிய நீங்கள் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

எமது உரிமைகளை பாதுகாக்கவேண்டும். ஏனெனில் சட்டமூலம் ஒன்று வந்தால் ஆலோசனை குழுவில் அதன் சரத்துக்கள் தொடர்பில் கலந்துரையாடப்படுவதில்லை. 

ஆனால் துறைசார் மேற்பார்வைக்குழுவில் சட்ட மூலத்தின் ஒவ்வொரு சரத்து தொடர்பாகவும் ஆராயப்படுகின்றது என்றார்.

இதற்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிக்கையில்,

நிலையியற் கட்டளைகளை தற்காலிகமாக இடை நிறுத்தி இருக்கின்றோம். அரசாங்கம் என்ற வகையில் அதுதொடர்பில் எதிர்வரும் காலங்களில் தீர்மானம் எடுப்போம். 

அதனால் தற்போது இருப்பது எமது அரசாங்கம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எமக்கு தேவையான முறையில் கொள்கையை மாற்ற முடியும். 

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், இதுதொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2024-12-10 10:41:56
news-image

மது போதையில் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ்...

2024-12-10 10:31:39
news-image

ரயில் - மோட்டார் சைக்கிள் மோதி...

2024-12-10 10:17:11
news-image

வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!

2024-12-10 10:06:38
news-image

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...

2024-12-10 10:03:38
news-image

இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி...

2024-12-10 09:16:17
news-image

இன்றைய வானிலை 

2024-12-10 06:56:10
news-image

உதயங்க வீரதுங்க - கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா...

2024-12-10 06:19:13
news-image

உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான...

2024-12-10 02:33:23
news-image

பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள்...

2024-12-10 02:14:11
news-image

அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து...

2024-12-10 02:11:03
news-image

நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு...

2024-12-10 02:07:37