இலங்கையர் ஒருவர் சவுதி அரேபியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 30 வயதுடைய நபர் ஒருவேர இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த நபர் எக் காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சடலம் விசாரணைகளுக்காக அந்நாட்டின் குற்றப்புலனாய்வு மற்றும் குற்ற வழக்கு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது 1.5 மில்லியன் இலங்கையர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.