காட்டு யானைக் குட்டியை துன்புறுத்திய ஜீப் வண்டியின் சாரதி கைது

By T Yuwaraj

10 Feb, 2022 | 07:13 PM
image

ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியில் அண்மையில் ஹபரணை பகுதியில் ஜீப் வண்டியின் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி காட்டு யானையை துன்புறுத்திய ஜீப் வண்டியின் சாரதி ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் இன்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபருக்கு 200,000. ரூபாவை தண்டப்பணமாக அறவிடுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது

மின்னேரிய தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையை அடுத்து கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜீப் ஓட்டுநர் தனது பொறுப்பற்ற நடத்தைக்காகவும், குட்டி யானையை துன்புறுத்தியதற்காகவும் பல சமூக ஊடக பயனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right