கோபா குழுவின் தலைவராகப் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மீண்டும் தெரிவு

Published By: Vishnu

10 Feb, 2022 | 05:47 PM
image

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவுசெய்யப்பட்டார். 

May be an image of 1 person and text that says 'COMMITTEE ON PUBLIC ACCOUNTS (COPA) CHAIRMAN was Hon. (Prof) Tissa Vitharana unanimously elected to serve as the Chairman to the Committee Public Accounts the Committee meeting held for the Second Session of the Ninth Parliament. on at first'

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (10) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஸோக அபேசிங்ஹ வழிமொழிந்தார்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.

பாராளுமன்றத்தின் 119 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய இந்தக் குழுவுக்கான உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டனர். 

இதன்படி, அமைச்சர் உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன, வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாந்து, நிரோஷன் பெரேரா, அஸோக அபேசிங்ஹ, புத்திக பத்திறண, கே. காதர் மஸ்தான், மொஹமட் முஸம்மில், சிவஞானம் சிறீதரன், ஹேஷா விதானகே, வைத்தியகலாநிதி உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வீரசுமன வீரசிங்ஹ,  பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர். 

அரசாங்கச் செலவுகளை எதிர்நோக்குவதற்காகப் பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகைகளைக் காட்டுகின்ற கணக்குகளையும் குழு தனக்கெனக் கருதும் பாராளுமன்றத்தின் முன்னிடப்படும் பிற கணக்குகளையும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் உதவியுடன் பரிசோதனை செய்வது அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கடைமையாகும். 

இன்றைய கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக, தயாசிறி ஜயசேகர, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷன் பெரேரா, அஸோக அபேசிங்ஹ, மொஹமட் முஸம்மில், சிவஞானம் சிறீதரன், வைத்தியகலாநிதி உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வீரசுமன வீரசிங்ஹ,  பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

May be an image of 12 people, people sitting and indoor

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை...

2024-03-04 01:35:24
news-image

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ;...

2024-03-04 01:25:16
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00