பங்காளிக் கட்சிகளுடன் தொடர்ந்து இணக்கமாக செயற்பட எதிர்பார்த்துள்ளோம் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

By T. Saranya

10 Feb, 2022 | 09:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் பேரணி எதிர்வரும் நாட்களில் இடம்பெறும். 

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுடன் தொடர்ந்து இணக்கமாக செயற்பட எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினை கட்டுப்படுத்தும் அரசாங்கம் பிரதான இலக்கு தற்போது வெற்றிப்பெற்றுள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கருத்திற் கொண்டு கடந்த இரண்டு வருடகாலமாக பொதுஜன பெரமுன எவ்வித மக்கள் கூட்டங்களையும் நடத்தவில்லை.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்தரப்பினர் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள். தவறான நிலைப்பாட்டை திருத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு கட்சிக்கு உண்டு அத்துடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களை கருத்திற் கொண்டு செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுப்படுவதும் அவசியமாகும்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மக்கள் கூட்டம் நேற்று முனிதினம் அநுராதபுரம் நகரில் இடம்பெற்றது. கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளை ஒன்றினைத்து மாபெரும் மக்கள் கூட்டத்தை எதிர்வரும் நாட்களில் நடத்த எதிர்பார்த்துள்ளோம். அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் ஒரு சில தவறான நிலைப்பாடு மாற்றியமைக்கப்படும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கும் ஒருசில விடயங்களில் கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. 

அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு எட்டப்படும். பங்காளி கட்சிகளுடன் தொடர்ந்து இணக்கமாக செயற்பட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப்...

2022-12-08 16:10:34
news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07