பாகிஸ்தானில்  ஆண் குழந்தை பிறக்க கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணிகளை அடித்த வைத்தியர் 

Published By: Digital Desk 4

10 Feb, 2022 | 04:58 PM
image

பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென குறித்த கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணியை அடித்த உள்ளூர் வைத்தியர் ஒருவரை குறித்த பகுதி பொலிஸார் தேடி வருகின்றனர்.

pregnant-pak-woman-had-nail-hammered-into-head-to-guarantee-baby-boy

பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்று, தனது தலையில் இருந்த ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள் தலையில் ஆணி எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது அவர், “நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்தப் பிரசவத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கேட்டுக் கொண்டேன். அவரோ, எனது தலையில் 5 சென்றிமீற்றர் அளவிலான ஆணிகள் ஐந்தை அடித்து அனுப்பினார். ஆனால் எனக்கு அதனால் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. எனவே அதை அகற்ற வேண்டும்” என்றார்.

Peshwar Police

“அந்த ஆணிகள் மூளையில் தொடவில்லை. ஆணி அறையப்பட்டதால் மிகுந்த வலியில் இருந்த பெண் முதலில் தானே ஆணியை அறைந்து கொண்டதாகக் கூறினார். பின்னர் தான் அவர் தலையில் ஆணியை அந்த வைத்தியர் அறைந்தது தெரியவந்ததாக வைத்தியர்கள் கூறினர்.

இதையடுத்து வைத்தியர்கள் அந்தப் பெண்ணின் தலையில் இருந்து ஆணியை அப்புறப்படுத்தி அனுப்பினர். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலை சீ.சீ.டிவி கெமராக்களின் காட்சிகளைக் கொண்டு அந்தப் பெண்ணை தேடி வருதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில்,அவரை விசாரித்து அந்த உள்ளூர் வைத்தியரை கைது செய்யவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17