(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 2 ஆயிரம் கொள்கைகளை விடுப்பதற்கு 30 மில்லியன் தொடக்கம் 35 மில்லியன் வரையில் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி வழங்க வேண்டும்.
எதிர்வரும் வாரமளவில் அக்கொள்கலன்களை விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
டொலர் நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பிலான தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கையை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் சமர்ப்பித்துள்ளோம்.
கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலரை பெற்றுக் கொள்ள வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மத்திய வங்கியின் ஆளுநருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளார்.
அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 2000ஆயிரம் கொள்கலன்கள் தேங்கியுள்ளன.
அவற்றை விடுவிக்க 30 மில்லியன் தொடக்கம் 35 மில்லியன் வரையில் அமெரிக்க டொலர் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியின் போது நடைமுறையில் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை பெற்றுக் கொடுக்க உரிய திட்டத்தை செயற்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
துறைமுகத்தில் தேங்கியுள்ள 2000ஆயிரம் கொள்கலன்கள் எதிர்வரும் வாரமளவில் விடுவிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM