மன்னாரில் இடம்பெறவிருந்த இந்திய மீனவர்களின் படகு ஏலம் இடை நிறுத்தம்

By T Yuwaraj

10 Feb, 2022 | 04:14 PM
image

தலைமன்னார் பியர் இறங்குதுறையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) பகல் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஏல விற்பனையில் கலந்து கொண்டு படகுகளை கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் தலைமன்னார் பியர் இறங்கு துறை பகுதிக்கு சென்றிருந்தனர்.

எனினும் அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம் பெறவில்லை என கொள்வனவாளர்கள் தெரிவித்தனர்.

இன்று (10) வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காக காத்திருந்த போதும் இறுதி நேரத்தில் குறித்த ஏல விற்பனை இடம்பெறாது என ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தூர இடங்களில் இருந்து சென்றவர்கள் கொள்வனவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right