ரிஷாத் - ரிஷாத்தின் மனைவியின் வெளிநாட்டுப் பயணத் தடை தற்காலிகமாக நீக்கம்

10 Feb, 2022 | 01:49 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட  16 வயதான  ஹிஷாலினி,  உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகநபர்களான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் அவரது மனைவி ஆயிஷாவுக்கும் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப்பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திரா ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜராகி நகர்த்தல் பத்திரம் ஊடாக முன்வைத்த விசேட கோரிக்கையை ஏற்றே இந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது. 

அதன்படி எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதிவரை அவ்விருவருக்கும் விதிக்கப்பட்ட வெளிநாட்டுப்பயணத்தடையைத் தற்காலிகமாகத் தளர்த்துவதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு மேலதிக நீதிவான் ரஜீந்திரா ஜயசூரிய அறிவித்து உத்தரவிட்டார். 

18 வயதின் கீழான ஒருவரை அடிமைத்தனத்துக்கு அல்லது கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தியமை, துன்புறுத்தலுக்கு உட்படுத்தியமை, கடத்தல் அல்லது சுரண்டலுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தரகரான பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர், ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு இகிதர் மொஹம்மட் சிஹாப்தீன், ரிஷாத் பதியுதீனின் மனைவி கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆயிஷா, கிதர், மொஹம்மட் சிஹாப்தீன் இஸ்மத், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் சந்தேகநபர்களாகக் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது. 

இவ்வாறான நிலையிலேயே நேற்று  மூன்றாவது சந்தேகநபர் ரிஷாட்டின் மனைவியான ஆயிஷா, 5 ஆவது சந்தேகநபர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்காக மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா முன்னிலையானார். 

குறித்த இரு சந்தேகநபர்களுக்கும் கட்டார் நாட்டில் இடம்பெறும் மாநாடு, கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ளவேண்டியிருப்பதாக அதற்குரிய ஆவணங்களை முன்வைத்து சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதிவான் ரஜீந்திரா ஜயசூரிய பயணத்தடையைத் தற்காலிகமாகத் தளர்த்தி, அது தொடர்பில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க நீதிமன்றப்பதிவாளருக்கு உத்தரவிட்டார். 

இதற்காக மூன்றாம், ஐந்தாம் சந்தேகநபர்கள் தங்களுக்கு ஏற்கனவே பிணையாளர்களாக நின்றவர்களுக்கு மேலதிகமான மேலும் இரு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையாளர்கள் இருவரை நீதிமன்றில் நிறுத்தவேண்டும் எனவும் நீதிவான் அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம்,...

2026-02-18 18:20:34
news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37