(இராஜதுரை ஹஷான்)
தேர்தல் வெற்றியை இலக்காகக்கொண்டு அரசியல் தீர்மானங்களை ஒருபோதும் முன்னெடுக்கவில்லை.
கடினமான சூழ்நிலைகளின் போதும் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தீர்மானமிக்க தீர்மானங்களை முன்னெடுத்துள்ளோம்.
அரசியல் சூழ்ச்சிகளை தவிர்த்து மக்களுடனான தேர்தல் பிரசாரத்தில் எதிர்தரப்பினர் இனி கலந்துக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சமான கொள்கை திட்டத்தை எதிர்வரும் மூன்று வருடகாலத்தில் செயற்படுத்துவதற்கான நடவடிக்கையினை இனி முன்னெடுப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அநுராதபுரம் நகரில் நேற்று புதன்க்கிழமை 9 ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது அரசியல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது,
வரலாற்று சிறப்பு மிக்க அநுராதபுரம் புனித பூமியில் இருந்து புதிய பயணத்தை தற்போது ஆரம்பித்துள்ளோம்.
கொவிட் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் கடந்த இரண்டு வருட காலமாக முன்னுரிமை வழங்கியது.
கொவிட் தடுப்பூசி செலுத்தலுக்கு எதிராக எதிர்தரப்பினர் திட்டமிட்ட வகையில் விமர்சனங்களை முன்னெடுத்தார்கள்.
கொவிட் -19 தடுப்பூசி செலுத்தல் செயற்திட்டத்தை பலவீனப்படுத்த எதிர்தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள்.
சர்வதேசத்திற்கும் தவறான கருத்துக்கள் குறிப்பிடப்பட்டன.
விவசாயிகளின் பிரச்சினையை நன்கு அறிவோம்.
ராஜபக்ஷர்கள் விவசாயிகளின் விரோதிகள் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க எதிர்தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிகாலத்தில் நெல்லுக்கான உத்தரவாத விலை 12 ரூபாவாக காணப்பட்டது.
நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்குமாறு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.
பலர் விஷம் அருந்தினார்கள்.ஆனால் ஐக்கியதேசிய கட்சிதலைமையிலான அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்திற் கொள்ளவில்லை.
2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விவசாயிகளின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் பல திட்டங்களை செயற்படுத்தியது.
விவசாயத்துறை முன்னேற்றமடைந்தால் நல்லாட்சி அரசாங்கம் மத்தள விமான நிலையத்தை நெற்களஞ்சியமாக மாற்றியமைத்தது.
நாட்டு மக்களினதும்,விவசாயிகளினதும் நலனை கருத்திற் கொண்டு சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நிவாரணமளிக்கும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை 75 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 3வருட காலத்தில் தோற்றம் பெறும் சவால்களை வெற்றிக் கொள் தயாராகவுள்ளோம். வீதிக்கிறங்கி போராடிய அனுபவம் எமக்கு நன்கு உண்டு.
நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது.
எமது ஆட்சி காலத்தில் உயர்பதவி வகித்தவர்கள் சிறைப்பிடிக்கபட்டு அரசியல் பழிவாங்கள்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
அலரிமாளிகைக்க சட்டமாதிபர் திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட விதத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குரல் பதிவாக வெளியிட்டதை மறக்கவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டில் அடிப்படைவாதம் தலைத்தூக்கியது.
தேசிய பாதுகாப்பு திட்டமிடப்பட்ட வகையில் பலவீனப்படுத்தப்பட்டதன் விளைவை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் ஊடாக நாட்டு மக்கள் விளங்கிக் கொண்டார்கள்.
2019ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
தேர்தல் வெற்றியை கருத்திற் கொண்டு அரசியல் தீர்மானங்களை ஒருபோதும் முன்னெடுக்கவில்லை.நாட்டுக்கான அபிவிருத்தி பணிகளுக்கு எவ்வேளையிலும் முன்னுரிமை வழங்கினோம்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சமான கொள்கை திட்டத்தினை எதிர்வரும் 3 வருட காலத்திற்குள் செயற்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பது எமது பிரதான நோக்கமாகும்.
சூழ்ச்சிகளினால் அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியை எதிர்தரப்பினர் கைவிட்டு விட்டு மக்கள் மத்தியில் சென்று தமது ஆளுமையினை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.மக்கள் மத்தியில் செல்ல நாங்கள் தயாராகவுள்ளோம் முடிந்தால் மக்களின் ஆதரவை பெற்றுக்காட்டுமாறு சவால் விடுகிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM