(ஜெ.அனோஜன்)
லிபிய பிரதமர் அப்துல்ஹமித் டிபீபாவின் வானத் தொடரணி மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைக்காலத் தலைவர் வீடு திரும்பும் வேளையில் லிபிய தலைநகர் திரிபோலியில் வியாழன் அதிகாலை இந்த தாக்குதல் நடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி தோட்டாக்களில் ஒன்று பிரதமரின் காரின் கண்ணாடிக்குள் ஊடுருவியது, ஆனால் அவரும் அவரது வாகன சாரதியும் காயமின்றி தப்பினர்.
இந்த தோட்டாக்கள் ஒரு இலகுரக ஆயுதத்தில் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
கடந்த ஆண்டு லிபியாவின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்ட அப்துல்ஹமித் டிபீபா, தன்னை பதவி நீக்கம் செய்யும் எதிர்ப்பாளர்களின் முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்துள்ள நிலையில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் மீதான கடுமையான பிரிவு சண்டைகளுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM