புகழ்­பெற்ற காய்­கறி வகை­களில் ஒன்­றான கத்­த­ரிக்காய், சைவப் பிரி­யர்­க­ளுக்கு மிகவும் அரு­மை­யான சுவை­யுள்ள உண­வாகும்.

பிஞ்சுக் கத்­த­ரிக்­காயை நல்­லெண்­ணெ­யுடன் சேர்த்து செய்யும் சமை­ய­லா­னது ஆஹா! மிகவும் அற்­பு­த­மாக இருக்கும். 

கத்­த­ரிக்­காயில் அதிக நீர்ச்­சத்து, இரும்­புச்­சத்து, புரதம், நார்ச்­சத்து, கார்­போ­ஹை­தரேட், பாஸ்­பரஸ், கல்­சியம், விற்ற­மின்கள் A, C, B2,  மற்றும் B2 போன்ற சத்து வகைகள் காணப்­ப­டு­கின்­றன.

இந்த கத்­த­ரிக்காய் வெள்ளை, ஊதா மற்றும் கறுப்பு போன்ற நிறங்­களில் காணப்­ப­டு­கின்­றது.

கத்­த­ரிக்காய் சாப்­பி­டு­ப­வர்­களின், உடம்பின் தன்­மையை பொறுத்து, சில­ருக்கு ஒத்துக் கொள்­ளாமல், உடம்பில் அலர்­ஜியை ஏற்­ப­டுத்தி பெரிய பாதிப்­பு­க­ளாக மாற்­றி­வி­டு­கி­றது.

கத்­த­ரிக்காய் சாப்­பி­டு­வதால் கிடைக்கும் 

நன்­மைகள்

கத்­த­ரிக்காய் நச்­சுக்­களை வெளி­யேற்றி, இரத்­தத்தை சுத்தம் செய்­கி­றது.புற்­றுநோய் மற்றும் ஆஸ்­துமா நோய் உள்­ள­வர்கள் கத்­த­ரிக்­காயை மிளகு, சீரகம், பூண்டு ஆகி­ய­வற்றை சேர்த்து சமைத்து சாப்­பிட்டால் மிகவும் நல்­லது.கத்­த­ரிக்­காயில் அன்டி அக்­ஸி­டென்­டுகள் இருப்­பதால், நம் உடம்பில் உள்ள தேவை­யற்ற கொழுப்­புகள் மற்றும் சிறு­நீ­ரகக் கற்­களை கரைத்து, உயர் இரத்த அழுத்­தத்தை கட்­டுப்­ப­டுத்­து­கி­றது.

கத்­த­ரிக்­கா­யி­லுள்ள ஃபைட்டோ நியூட்­ரியன்ட்ஸ், நமது சரு­மத்தை மென்­மை­யாக்கி, நினை­வாற்­றலை அதி­கப்­ப­டுத்­து­கி­றது. மேலும் மூளைச் செல்­களை பாது­காத்து, இதய நோய்கள் வராமல் தடுக்­கி­றது.

விற்ற­மின்கள் அதி­க­மாக இருப்­பதால் நாக்கில் ஏற்­படும் அலர்­ஜி­யினைப் போக்­கு­வதில் முக்­கிய பங்­காற்­று­கி­றது.

கத்த­ரிக்காய் சாப்­பி­டு­வதால் ஏன் அலர்ஜி ஏற்­ப­டு­கி­றது?

கத்­தரிக்­காயில் அதி­கப்­ப­டி­யான புரோட்டின், சோலனைன், ஹிஸ்­டமின் இருப்­பதால், கத்­த­ரிக்காய் சாப்­பிடும் சிலர் உடம்பின் தன்­மைக்கு ஒத்துப் போகாமல் அலர்­ஜியை உண்­டாக்­கு­கி­றது.

கத்த­ரிக்காய் சாப்­பி­டு­வதால் அதில் உள்ள சோலனைன் என்ற புரோட்டின் ஜீரண மண்­டலம் மற்றும் நரம்பு மண்­ட­லத்­திற்கு எதி­ராக இடை­யூறு விளை­விக்கும். இதனால் அலர்ஜி, வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல் மற்றும் காய்ச்சல் போன்­றவை ஏற்­பட கார­ண­மாக உள்­ளது.

ஹிஸ்­டமின் நமது உடலிலேயே சுரக்கப்படும் ஒரு புரோட்டின். எனவே, ஹிஸ்டமின் அதிகம் உள்ள உடலிற்கு ஒவ்வாத கத்தரிக்காயை நாம் சாப்பிடும் போது, நம் உடம்பில் சரும அலர்ஜி, கொப்புளம் மற்றும் அரிப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.